சூறைக்காற்றுக்கு மரம் விழுந்து வீடு சேதம்

சாணார்பட்டி பகுதியில் சூறைக்காற்றுக்கு மரம் விழுந்து வீடு சேதமாகியது.

Update: 2023-06-11 19:00 GMT

சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரம், மேட்டுக்கடை, ஆவிளிபட்டி பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணிக்கு திடீரென்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு மேட்டுக்கடை பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. வீட்டின் முன்பகுதியில் விழுந்ததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. மேலும் சூறைக்காற்றுக்கு அப்பகுதியில் தோப்புகளில் இருந்து 10 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் சிறிது நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்