சூறைக்காற்றுக்கு மரம் விழுந்து வீடு சேதம்

வடமதுரை அருகே சூறைக்காற்றுக்கு மரம் விழுந்து வீடு சேதமாகியது.;

Update: 2023-05-28 19:00 GMT

வடமதுரை அருகே உள்ள பிலாத்து ஆண்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர், மட்டும் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வடமதுரை பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது லட்சுமி வீட்டருகே இருந்த வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. வீட்டில் இருந்த லட்சுமி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்