சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் குஜராத் பக்தர்

சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் குஜராத் பக்தர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2023-06-26 19:51 GMT

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் ரபிக் போலோ (வயது 64). இவர் இந்தியா முழுவதும் சைக்கிளில் ஆன்மிக பயணம் செய்து வருகிறார். நேற்று நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சைக்கிளில் இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். 3½ மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன். நெல்லையப்பரை தரிசனம் செய்து விட்டேன். இனி கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்ல உள்ளேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்