ஹென்றி பள்ளியில் இருபெரும் விழா

சாத்தான்குளம் ஹென்றி பள்ளியில் இருபெரும் விழா நடந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா மற்றும் 44-வது ஆண்டு கலைத்திருவிழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி தலைமை தாங்கினார். சென்னை காங்னிசன்ட் டெக்னால்ஜி சொலுசன்ஸ் திட்ட மேலாளர் கே.பி.மரிய பொன்னையா, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நோபிள்ராஜ் வரவேற்றார். பள்ளி இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கண்காணிப்பாளர் டி.எஸ்.பிரபகுமார், ஸ்டார் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ஆர்.ஜெயபிரகாஷ், வக்கீல் கவிராஜ் எஸ்.ராஜ்குமார், சாத்தான்குளம் வர்த்தக சங்க தலைவர் சசிகரன் ஆகியோர் பேசினர். மேல சாத்தான்குளம் சேகரத் தலைவர் கிங்ஸிலிஜான் ஆரம்ப ஜெபம் நடத்தினார். கல்வி மற்றும் விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் புளியடி மாரியம்மன் இந்து கல்வி சங்க துணைத் தலைவர் சங்கர், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தூர்ராஜன், பொறியாளர் ராஜவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்