ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார்படுத்தும் பட்டதாரி வாலிபர்

ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார்படுத்தும் பணியில் பட்டதாரி வாலிபர் ஈடுபட்டுள்ளார்

Update: 2022-12-26 20:28 GMT

அலங்காநல்லூர்,

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விழாவும் ஒன்று. அவனியாபுரத்தில் வருகிற 15-ந் தேதியும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை உள்பட பல மாவட்டங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் தயாராகி வருகிறது. இதில் சர்க்கரை ஆலை மேட்டு பட்டியை சேர்ந்த கவுசிக் தெய்வம் என்ற பட்டதாரி வாலிபர் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பாரம்பரிய பெருமைக்காகவும், வீரத்தை தெளிவுபடுத்துவதற்கும், மக்களின் பழைய கலாசாரம் காக்கப்படுவதற்காகவும், இப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் எர்ரம்பட்டி தோட்டத்து பண்ணையில் வளர்த்து வருகிறோம். இந்த காளைகளுக்கு முன்னோட்டமாக நடை, நீச்சல், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். தீவனமாக நாட்டு பருத்தி விதை, முதிர்ந்த தேங்காய் பருப்பு, வைக்கோல், நாட்டு கோழி முட்டை உள்ளிட்ட பல்வேறு சத்துள்ள தீவனத்தை வழங்கி வருகிறோம். எங்கள் வீட்டு பெண்கள் தண்ணீர் வைப்பது போன்ற பணிகளை தனி கவனம் செலுத்தி பார்த்து வருகிறார்கள். 60-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்