தடுப்பு கட்டையில் அரசு விரைவு பஸ் மோதி விபத்து

திண்டிவனத்தில் தடுப்பு கட்டையில் அரசு விரைவு பஸ் மோதி விபத்து 25 பயணிகள் காயம்

Update: 2023-04-30 18:45 GMT

திண்டிவனம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சை நரசிம்மன்(வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றார். தமிழ்மணி(48) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

திண்டிவனம் அருகே திருவண்ணாமலை புறவழிச்சாலையில் பஸ் வந்தபோது புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென முந்தி செல்ல முயன்றது. அப்போது அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் வலது புறமாக திருப்பியபோது எதிர்பாராதவிதமாக சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் அரசு பஸ் மோதி ஏறி நின்றது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 25-பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்