அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்

பெரும்பாறை மலைப்பாதையில் அரசு பஸ் அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2023-05-11 19:00 GMT

வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியங்குடிசை வழியாக பண்ணைக்காட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் பகல் 11.45 மணிக்கு வத்தலக்குண்டுவில் இருந்து புறப்பட்டு செல்கிறது. நேற்று இந்த பஸ் வத்தலக்குண்டுவில் இருந்து புறப்பட்டு பண்ணைக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பெரும்பாறை மலைப்பாதையில் திடீரென்று நடுவழியில் பஸ்சின் பின்பக்க டயர் பஞ்சராகி நின்றது. அதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அவதிப்பட்டனர். பின்னர் அவர்களை மாற்று பஸ்சில் ஊருக்கு அனுப்பினர். கடந்த சில தினங்களாக பெரும்பாறை பகுதியில் மலைப்பாதையில் செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி பாதியிலேயே நிற்கும் அவல நிலை அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ஆனால் தொடர்ந்து பழுதாகி நிற்கும் பஸ்களை பண்ணைக்காடுக்கு அனுப்புவதால் குறித்த நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர். எனவே மலைக்கிராமங்களுக்கு புதிய பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்