சாலையின் நடுவே பழுதடைந்து நின்ற அரசு பஸ்

அய்யம்பேட்டை அருகே நள்ளிரவில் சாலையில் நடுவே அரசு பஸ் பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-23 19:28 GMT

அய்யம்பேட்டை அருகே நள்ளிரவில் சாலையில் நடுவே அரசு பஸ் பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு பஸ்

திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு காரைக்கால் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிலடி பகுதிக்கு வந்தபோது திடீரென பழுதடைந்தது. இதனால் சாலையின் நடுவே பஸ் நிறுத்தப்பட்டது.

இதனால் அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பயணிகள் அவதி

இதையடுத்து தஞ்சை - கும்பகோணம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்களை போலீசார் வேறு வழியில் மாற்றி விட்டனர். அரசு பஸ்சில் ஏற்பட்ட பழுதினை சரி செய்த பிறகு 5 மணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இதனால் அய்யம்பேட்டை - பாபநாசம் இடையே உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்