மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்

மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்

Update: 2023-09-01 21:46 GMT

அருமனை:

அருமனை அருகே உள்ள ஆறுகாணியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் உத்திரங்கோடு என்ற இடத்தில் வந்த போது எதிரே ஒரு கனரக லாரி வேகமாக வந்தது. லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் பக்கவாட்டில் திருப்பினார். இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின்கம்பம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மின்கம்பம் முறிந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். அதேநேரத்தில் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அருமனை பகுதியில் குறுகிய சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் எதிரே வரும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே கனரக வாகனங்களை முக்கியச் சாலைகள் வழியாக மட்டுமே இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்