கூடலூரில் மின்கம்பத்தில் மோதி நின்ற அரசு பஸ்-பயணிகள் உயிர் தப்பினர்
கூடலூரில் மின்கம்பத்தில் மோதி நின்ற அரசு பஸ்- பயணிகள் உயிர் தப்பினர்
கூடலூர்
கூடலூரில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு பந்தலூர் அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது நந்தட்டி சோதனை சாவடியை கடந்து சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க அரசு பஸ் டிரைவர் இடது புறம் பஸ்சை திருப்பினார். தொடர்ந்து சாலையோரம் உள்ள வளைந்த மின் கம்பத்தின் மீது அரசு பஸ் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன் பாகம் சேதமடைந்தது. மேலும் பயணிகளும் பீதி அடைந்தனர். தொடர்ந்து காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.