முறிந்து விழுந்த மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து
முறிந்து விழுந்த மரத்தில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அடுக்கம்பாறை
முறிந்து விழுந்த மரத்தில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி நேற்று அதிகாலை அரசு பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது கணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அருகே 4 மணியளவில் வந்தபோது அங்்கு மழையின் காரணமாக முறிந்து விழுந்து கிடந்த புளிய மரத்தின் கிளை மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை சக பயணிகள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து சாலையில் விழுந்த புளிய மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது