கூடலூர்
கூடலூரில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலானவை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகளுடன் செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோவைக்கு அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது பழைய பஸ் நிலையத்தை கடந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி நின்றனர். இதை அறிந்ததும் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஊழியர்கள் விரைந்து வந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு பஸ் பழுது நீக்கப்பட்டு புறப்பட்டு சென்றது.