படைப்பத்து மாரியம்மனுக்கு தங்கப்புடவை சாத்தப்பட்டது

படைப்பத்து மாரியம்மனுக்கு தங்கப்புடவை சாத்தப்பட்டது.

Update: 2023-04-14 18:40 GMT

அரியலூர் நகரில் மேலத்தெருவில் உள்ள படைப்பத்து மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு பக்தர்கள் பல்வேறு காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியலூரில் உள்ள ஏ.பி.என். ஜவுளி ஸ்டோர் அண்டு ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அம்மனுக்கு வெள்ளியில் தங்கமுலாம் பூசப்பட்ட புடவை சாத்தப்பட்டது. இதையொட்டி ஏ.பி.என். ஜவுளி ஸ்டோர் குடும்பத்தினர் சுதாகர், காமாட்சி, விஜயகுமார், ரோஹித் கிருஷ்ணன், ஆனந்த், மகாலட்சுமி, தர்ஷினி, கன்சிகா மற்றும் சண்முகா ஜுவல்ஸ் கணேசன், தொழிலதிபர் டெல்லி ராஜ் ஆகியோர் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட புடவையை ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு கஞ்சி, பானகம், பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்