பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு

சூரப்பள்ளத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-01 18:45 GMT

ராஜாக்கமங்கலம்:

சூரப்பள்ளத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தங்கசங்கிலி பறிப்பு

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி (வயது 37). இவர் சம்பவத்தன்று குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு, தனது இரு குழந்தைகளுடன் சூரப்பள்ளம் பகுதியில் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் கிருஷ்ணகுமாரியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்கசங்கிலியை பறித்தார். உடனே கிருஷ்ணகுமாரி திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். அதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சங்கிலியை பறித்தவர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தனர்.

போலீஸ் தேடுகிறது

இதுபற்றி கிருஷ்ணகுமாரி ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்