பயணி கடத்தி வந்த ரூ.22 லட்சம் தங்கச்சங்கிலி பறிமுதல்
பயணி கடத்தி வந்த ரூ.22 லட்சம் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.;
செம்பட்டு:
பயணிகளிடம் சோதனை
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் துபாய், மலேசியா, சிங்கப்பூர் என்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கச்சங்கிலி பறிமுதல்
அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த உபயதுல்லா என்பவர் சாக்லேட் பவுடர் டப்பாவில் ரூ.21 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 386 கிராம் தங்கச்சங்கிலியை மறைத்து வைத்து, கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், உபயதுல்லாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.