இரவில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்: வாலிபர் செய்த வில்லத்தனமான செயல்

தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 21 வயது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.;

Update: 2024-01-21 11:33 GMT

செய்யாறு,

செய்யாறு அருகே மருத்துவமனை பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செய்யாறு தாலுகா தென் இலுப்பை கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் சிவா (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சிவாவுக்கு செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளம்பெண் கடந்த 18-ந் தேதி இரவு தனது கிராமத்திற்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவா கிராமத்தில் விடுகிறேன் என கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். நர்மாபள்ளம் கிராமம் அருகே சென்றபோது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ரத்த காயங்களுடன் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை கைது செய்தார். பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்