நகராட்சி கிணற்றில் மாணவி குதித்ததால் பரபரப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆம்பூரில் தற்கொலைக்கு முயன்று நகராட்சி கிணற்றில் மாணவி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-23 12:48 GMT

ஆம்பூர்

ஆம்பூரில் தற்கொலைக்கு முயன்று நகராட்சி கிணற்றில் மாணவி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் சவுராஷ்டிரபுரம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நடந்த தேர்வை சரியாக எழுதவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு நகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

----


Tags:    

மேலும் செய்திகள்