வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு

வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படுவதாகவும், அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-25 18:22 GMT

தமிழக அரசால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந் தேதி அன்று தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட உள்ளது. தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெறுவதற்கு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு இருத்தல் வேண்டும். 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள பெண் குழந்தைகள் இருப்பின் பெயர், தாய், தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படம், குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனை ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் (ஒரு பக்கத்திற்கு மிகாமல்) ஆகியவைகளுடன், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்