தூய்மை பணியாளருக்கு பரிசு
சிவகிரியில் தூய்மை பணியாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி நகர பஞ்சாயத்து வார்டு பகுதியை தூய்மையாக மாற்றி குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக செயல்பட்ட 17-வது வார்டு தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
இதில் நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிவகிரி நகர பஞ்சாயத்து சார்பில் 15-வது வார்டு நாடார் கடை பஜாரில் உள்ள பாலம் மற்றும் வடகால் ஓடை மற்றும் முக்கிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.