ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்தது
ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்தது.
ஏற்காடு:
ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்தது.
ராட்சத பாறை விழுந்தது
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது கோடை சீசன் நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் கடந்்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளு,குளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இதனிடையே நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு-சேலம் மலைப்பாதையிலும் தண்ணீர் அதிகமாக ஓடியது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ஏற்காடு அடிவாரத்தில் இருந்து 3-வது கிலோ மீட்டரில் மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்தது. ஒரே ஒரு பாறை மட்டும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
அகற்றம்
இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பாறை சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கு பகுதியில் தள்ளி விடப்பட்டது. சுமார் 30 நிமிடங்களில் பாறை அகற்றப்பட்டது. தொடர்ந்து பாறை விழுந்த இடத்தில் ஏற்பட்ட சேதம் சரி செய்யும் பணி நடந்தது.