இயற்கை வளம் அமைப்பின் பொதுக்குழு கூட்டம்

குற்றாலத்தில் கனிமம் மற்றும் இயற்கை வளம் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2023-07-25 18:45 GMT

தமிழ்நாடு கனிமம் மற்றும் இயற்கை வளம் சார்ந்த அமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பொற்கை பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சோனை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கனிம நிறுவனங்களுக்கு அருகில் மாவட்ட கலெக்டர் மூலம் 50 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டுமானத்துக்கு தேவையான மூலப்பொருளான கனிமங்களை அரசு நிலங்களில் ஆய்வு செய்து குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும். அனைத்து கிராம பகுதிகளில் கட்டுமானத்திற்கு தேவையான ஜல்லி, எம்சாண்ட் போன்ற மூலப் பொருட்களை உற்பத்தி செய்ய மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகளை அரசு அமைத்து தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்