முத்தாண்டிக்குப்பத்தில்தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

முத்தாண்டிக்குப்பத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-02 18:45 GMT


பண்ருட்டி,

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் கிராமத்தில் நெய்வேலி தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நெய்வேலி தொகுதி மேற்பார்வையாளரும், தி.மு.க. சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலாளருமான சுபா.சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் வருகிற ஜூன் 3-ந்தேதி திருவாரூரில் நடைபெறும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு மாநாட்டிற்கு நெய்வேலியிலிருந்து அதிகம் பேரை கலந்து கொள்ள செய்ய வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜவன்னியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவழகன், புகழேந்தி, அவை தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வகுமார், ஏழுமலை, அவை தலைவர் ராமசந்திரன், நெய்வேலி நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், கவுன்சிலர்கள் கவிதா ஞானசேகர், அருள் முருகன், உதய் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஹிரி ராமசந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்