எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும் தொண்டர்களுக்கு பொன்.கவுதமசிகாமணி எம்.பி. அறிவுறுத்தல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு பொன்.கவுதமசிகாமணி எம்.பி. அறிவுறுத்தினார்.

Update: 2022-10-15 18:45 GMT


திருக்கோவிலூர், 

முகையூர் வடக்கு ஒன்றிய A gathering of DMK workersஆலம்பாடியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான கண்டாச்சிபுரம் ஜி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமிஉமேஸ்வரன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரேமால்அல்போன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், சாந்தகுமார், ஒன்றிய துணை செயலாளர் லூயிஸ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் காத்தவராயன் வரவேற்றார்.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொன். கவுதமசிகாமணி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கட்சியில் உழைக்கின்ற ஒவ்வொருவருக்கும் கட்சி தலைமை உரிய நேரத்தில் பதவி கொடுத்து அழகு பார்க்கும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நான் பிரித்து பார்ப்பதில்லை. அனைவரையும் என் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன்.

பூத் கமிட்டி அமைக்கும் பணி

இன்னும் 1½ ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

விழுப்புரம் மாவட்டம் என்றுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டையாக இருக்கின்ற வகையில் தி.மு.க.வினர் கடுமையாக பாடுபட்டு வெற்றிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அதற்கு இப்போதே பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடங்கி அதனை திறம்பட செய்து முடிக்க வேண்டும். நீங்கள் கடுமையாக உழைத்தால் நான் என்றும் உங்களோடு துணை வருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வீரபாண்டி நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தொழிலதிபர் எம்.எஸ்.கே அக்பர், ஒன்றிய குழு துணை தலைவர் மனம்பூண்டி பி.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், திருக்கோவிலூர் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி நகரவை தலைவர் டி குணா, நகராட்சி கவுன்சிலர் கந்தன்பாபு, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வினோபா, சரவணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலம்பாடி கிளை செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்