அழகு நிலையத்தில் பொருட்களை அள்ளிச்சென்ற 7 பேர் கும்பல்

போதை பொருள் சோதனை செய்வதாக கூறி அழகு நிலையத் தில் பொருட்களை அள்ளிச்சென்ற 7 பேர் கும்பலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-30 21:30 GMT

குனியமுத்தூர்

போதை பொருள் சோதனை செய்வதாக கூறி அழகு நிலையத் தில் பொருட்களை அள்ளிச்சென்ற 7 பேர் கும்பலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அழகு நிலையம்

கோவை குனியமுத்தூர் திருமூர்த்தி நகரை சேர்ந்தவர் முகமது ஹாரீஷ் (வயது23). இவர் குனியமுத்தூர் ஞானபுரம் சந்திப்பு பகுதியில் ஆண்கள் அழகுநிலையத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அங்கு முடி திருத்துவது, முகத்தை அழகுபடுத்து வது உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகிறது.

அங்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஓரிரு இளைஞர்கள் மட்டும் இருந்தனர். அவர்களின் முடியை ஊழியர்கள் அழகுபடுத்திக் கொண்டு இருந்தனர்.

7 பேர் கும்பல் சோதனை

அப்போது திடீரென்று 7 பேர் கொண்ட கும்பல் அழகு நிலையத் துக்குள் புகுந்தது. அவர்கள், உங்கள் அழகுநிலையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜமாத்துக்கு புகார் வந்து உள்ளது

எனவே உங்கள் கடையில் சோதனை செய்ய அனுப்பி உள்ளார்கள் என்று முகமது ஹாரீசிடம் கூறி உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அந்த அழகு நிலையத்தில் சோதனை செய்தனர். ஆனால் எந்த பொருட்களும் சிக்கவில்லை. ஆனாலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அழகு நிலையத்தில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள், சிம்கார்டுகள், கேமராக்கள் ஆகியவற்றை எடுத்து உள்ளனர்.

விசாரணை

இது குறித்து முகமது ஹாரீஷ் கேட்டார். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் அங்கிருந்து தப்பி சென்றனர். உடனே அவர் ஜமாத்துக்கு சென்று கேட்டபோது, நாங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று கூறி உள்ளனர்.

அப்போது தான் மர்ம கும்பல் அழகுநிலையத்தில் புகுந்து பொருட்களை அள்ளி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்