விபத்தில் காயமடைந்த மாணவரை ஏற்றி சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்த நண்பர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

விபத்தில் காயமடைந்த மாணவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்தபடி சென்ற நண்பர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

Update: 2023-01-18 18:44 GMT

குலசேகரம், 

விபத்தில் காயமடைந்த மாணவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்தபடி சென்ற நண்பர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

மாணவர் காயம்

பேச்சிப்பாறை அருகே கடம்பன் மூடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ்குமார் மகன் ஜெபின் ஜார்ஜ் (வயது 22). இவர் பாறசாலை அருகே உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் பள்ளி முக்கு சந்திப்புக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதன் மீது ஜெபின் ஜார்ஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.

ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்

உடனே அவரை அந்த பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குலசேகரம் தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆம்புலன்சை பின்தொடர்ந்தபடி பேச்சிப்பாறை கடம்பன் மூடு பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் மகன் அஜின் (20), அதே பகுதியை சேர்ந்த வினு மகன் விஜின் (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பொனன்யா குளம் என்ற இடத்தை சென்றடைந்த போது எதிரே காக்கச்சல் என்ற இடத்தில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான செல்வகுமார் (40) மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பார்க்க சென்ற நண்பர் சாவு

இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஒரு வாகனத்தில் ஏற்றி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி அஜின் இறந்தார்.

உயிரிழந்த அஜின் கேட்டரிங் டெக்னாலஜி படித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

ெஜபின் ஜார்ஜிம், அஜினும் நண்பர்கள். இந்தநிலையில் விபத்தில் காயமடைந்த நண்பரை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றனர். இதனை அறிந்த அஜின் ஒருவித பதற்றத்துடன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்ற போது விபத்தில் சிக்கி பலியானார் என்ற தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்