என்ஜின் இணைப்பின்போது சரக்கு ெரயில் தடம் புரண்டது

நெமிலி அருகே என்ஜின் இணைப்பின்போது சரக்கு ெரயில் தடம் புரண்டது.

Update: 2023-04-21 18:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே மகேந்திரவாடி ெரயில் நிலையம் உள்ளது. இந்த ெரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் சரக்கு ெரயில் நிறுத்தப்பட்டது. பின்பு என்ஜின் மட்டும் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை என்ஜின் வரவழைக்கப்பட்டு சரக்கு ெரயிலோடு இணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென சரக்கு ெரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு தண்டவாளத்தில் தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரத்தை வரவழைக்க ஜோலார்பேட்டை ெரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிரதான லைனில் இல்லாமல் லூப் லைனில் சரக்கு ெரயில் தடம் புரண்டதால் பயணிகள் போக்குவரத்து ெரயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ரெயில்ேவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்