சிதைந்த நிலையில் புத்தர் சிலையுடன் மிதந்து வந்த தெப்பம்

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சிதைந்த நிலையில் புத்தர் சிலையுடன் தெப்பம் மிதந்து வந்தது. இது எந்த நாட்டை சேர்ந்தது? என கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-01-06 18:55 GMT

பொறையாறு:

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சிதைந்த நிலையில் புத்தர் சிலையுடன் தெப்பம் மிதந்து வந்தது. இது எந்த நாட்டை சேர்ந்தது? என கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தர் சிலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது பெரிய பேரல்கள், மரம் மற்றும் மூங்கில் ஆன தெப்பம் சிதைந்த நிலையில் இருந்தது. அதில் சிறிய புத்தர் போன்ற சிலை ஒன்றும் இருந்தது. அதில் பர்மா நாட்டின் கொடி போன்ற 4 கொடிகள் பறந்து கொண்டு உள்ளது. மிதந்து வந்த தெப்பத்தை மீனவர்கள் கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்து உப்பனாறு முகத்துவாரம் பகுதியில் கட்டி வைத்தனர்.

எந்த நாட்டை சேர்ந்தது?

இதுகுறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசாருக்கு மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த போலீசார் தெப்பத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இலங்கை, சீனா, பர்மா போன்ற நாடுகளில் புத்த மதம் உள்ளது. அவர்கள் தெப்பம் செய்து கடலில் விழா கொண்டாடும் போது திசை மாறி தமிழ்நாடு கடல் எல்லைப்பகுதிக்கு வந்ததா? அல்லது இந்த தெப்பம் எந்த நாட்டை சேர்ந்தது? அல்லது இதில் இருந்த ஆட்களின் கதி என்ன? அல்லது ஆட்கள் இல்லாமல் தெப்பம் மட்டும் வந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்