வணிக வளாகத்தில் தீ; மின்சாதன பொருட்கள் சேதம்

சின்னசேலம் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் சேதமானது.

Update: 2023-05-25 18:45 GMT

சின்னசேலம்:

சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தின் அருகே அண்ணா நூற்றாண்டு நினைவு வணிக வளாகம் அமைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் வாடகைக்கு பொது சேவை மையம், ஜெராக்ஸ் கடை, டெய்லர் கடை உள்ளிட்டவை இயங்கி வருகிறது, இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உரிமையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் வணிக வளாகத்தில் உள்ள மின்சாதன பொருட்களான மின்சார பெட்டிகள் மற்றும் பேட்டரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்