தைல மரக்காட்டில் தீ

தைல மரக்காட்டில் தீ ஏற்பட்டது.

Update: 2023-09-27 19:49 GMT

கந்தர்வகோட்டை-செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் தாழைவாரி அருகில் தனி நபருக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வாகனம் உள்ளே செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து இலை, தழைகளை வைத்து தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்