ஓடும் காரில் தீ விபத்து

Update: 2023-08-15 19:50 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 58). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். குணமடைந்ததால் ஊருக்கு செல்ல உறவினர் ஒருவர் காருடன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரவு 10.30 மணி அளவில் அவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர். கார் பால் மார்க்கெட் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் உடனே கீழே இறங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை உடனடியாக அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கார் மட்டும் சேதமானது.

மேலும் செய்திகள்