கடற்கரை புதரில் பற்றி எரிந்த தீ
அகஸ்தீஸ்வரம் அருகே கடற்கரை புதரில் திடீரென தீ பிடித்தது.
தென்தாமரைகுளம்:
அகஸ்தீஸ்வரம் அருகே கடற்கரை புதரில் திடீரென தீ பிடித்தது.
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஏராளமான புல் பூண்டுகள் மற்றும் புதர்கள் உள்ளன. இங்கு கடற்கரையில் வளர்ந்து நின்ற புதரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனால் கடற்கரை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைப்பார்த்து கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி பெனட் தம்பி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.