கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து

செங்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-10-26 18:45 GMT

செங்கம்

செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்பக்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டிடம் உள்ளது.

அந்த கட்டிடத்தில் கால்நடை துறை சார்பில் உபயோகப்படாத மற்றும் சேதம் அடைந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கட்டிடத்தில் நேற்று திடீரென மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்