ஆரணி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற மினி வேனில் தீ

ஆரணி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற மினவேன் வைக்கோலுடன் எரிந்து சேதமானது.

Update: 2023-04-12 12:16 GMT

ஆரணி

ஆரணி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற மினவேன் வைக்கோலுடன் எரிந்து சேதமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜங்கல் பகுதியைச் சேர்ந்த சாரதி (வயது 36). இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில் நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகளிடம் வைகோலை விலைக்கு வாங்கிக்கொண்டு மினி வேனில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி சென்றதாக தெரிகிறது. வேன் புறப்பட்டு சென்ற சிறிது தூரத்தில் மின் ஒயரில் மினிவேன் உரசியுள்ளது. அதனால் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி மினிவேன் எரியத் தொடங்கியது.

உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வைக்கோல் முழுவதும் எரிந்ததோடு வேனும் சேதமானது.

இது சம்பந்தமாக களம்பூர் போலீசில் சாரதி புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீசார்் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்