பட்டாசு கடையில் தீ விபத்து

ஆலங்குளம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-08-25 20:33 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் பிரதான சாலையில் குழந்தைவேலு (52) என்பவர் பட்டாசு கடை மற்றும் புத்தக நிலையம் நடத்தி வருகிறார். இந்த கடையின் மேல் மாடியில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். சுமார் 12.30 மணி அளவில் மாடியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்