கடலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-01-07 18:45 GMT

கடலூர் அருகே ஏணிக்காரன் தோட்டம் பழைய சுனாமி நகரில் தேங்காய் நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் குவிந்து கிடந்த தேங்காய் நார்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தன. இதில் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே இதுபற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார் தொழிற்சாலையின் பெரும்பகுதி எரிந்து சேதமானது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்