சோளிங்கரில் சினிமா தியேட்டரில் தீ விபத்து

சோளிங்கரில் சினிமா தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

Update: 2022-07-05 12:32 GMT

சோளிங்கரில் சினிமா தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

சினிமா தியேட்டரில் தீ விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே சினிமா தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு தியேட்டர்கள் உள்ளன. இங்குள்ள மினி தியேட்டரில்  அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மளமளவென பரவி தியேட்டர் முழுவதும் எரியத்தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து தீ எரிந்ததால் அரக்கோணத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பொருட்கள் சேதம்

அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தியேட்டரில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தியேட்டர் முழுவதும் எரிந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் எதவும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்