கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ விபத்து

மார்த்தாண்டம் அருகே கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-08-12 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோட்டில் ஜஸ்டின் என்பவர் பழைய கார்களை வாங்கி உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் உதிரிபாகங்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. நேற்று காலையில் குடோன் அருகே கழிவுகளையும், குப்பைகளையும் போட்டு எரித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கார் உதிரிப்பாகங்கள் மீது தீ பரவியது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீ மள...மளவென எரிய தொடங்கியது. உடனே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் துணையுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்