காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2023-09-25 18:45 GMT

நாகர்கோவில்:

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பீடு நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் இன்சூரன்ஸ் காப்பீடு எடுத்து இருந்தார். இதில் முறையாக ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளார். இந்த நிலையில் வில்சன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை காப்பீடு நிறுவனத்திடம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தரமறுத்தாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த வில்சன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் காப்பீடு நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட வில்சனுக்கு ஏற்கனவே சிகிச்சைக்காக செலவு செய்த ரூ.1,92,111 வழங்கிடவும், அவருக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்