வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Update: 2023-02-08 20:01 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள வீீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் கழிவு நீரை பொது வெளியில் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் உறிஞ்சி குழாய்கள் மூலமே கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகருக்குட்பட்ட தெங்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கழிவு நீரை தெருவில் வெளியேற்றுவதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து நேற்று காலை நாகர்கோவில் மாநகரட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையில் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் கழிவு நீரை பொதுவெளியில் திறந்துவிட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரத்தை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்