ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர் செங்குந்தபுரத்தில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி வழங்கினர். இதில் ரேஷன் அரிசையை பதுக்கி வைத்த குற்றத்திற்காக ஆறுமுகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.