குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம்

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-11-17 18:59 GMT

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி இருதய ராணி முன்னிலையிலும் குழந்தை தொழிலாளர் தடுப்பு படை உறுப்பினர்களுக்கான காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலர்கள் தொழிலாளர் துறை சேர்ந்த அலுவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழிலாளர் உதவிஆணையர் காளிதாஸ் மாவட்டத்தில் 1-10-2021 முதல் 31-10-2022 வரை பல்வேறு கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தெரிவித்தார். குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய 81 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஊக்குவிக்க வேண்டும்

கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:- மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை முறையாக பள்ளிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்த்து அவர்களை கல்வி பயில முறைப்படுத்த வேண்டும். அவர்களின் பெற்றோர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி அரசின் திட்ட உதவிகளையும் வழங்கி அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் விருதுநகர் துணை சூப்பிரண்டு அர்ச்சனா, சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குனர்கள் சித்ரா, ஸ்ரீதரன், இசக்கி ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்