மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-08-07 18:45 GMT

தக்கலை:

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தக்கலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குமாரகோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 43) என்பதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்