வாய்க்காலில் கட்டிட கழிவுகளை கொட்டியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

விழுப்புரத்தில் வாய்க்காலில் கட்டிட கழிவுகளை கொட்டியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2022-10-14 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரம் நகராட்சி சார்பில் கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் மேட்டுத்தெரு, ரகீம் லே-அவுட் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் கட்டிட கழிவுகளை கொட்டி வாய்க்காலை அடைத்து வைத்திருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ரகிம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டு கட்டிட கழிவுகளை வாய்க்காலில் கொட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வாய்க்காலில் மழைநீர் வழிந்தோட வழியின்றி கட்டிட கழிவுகள் கொட்டிய தனிநபருக்கு ரூ.1 லட்சத்தை அபராதமாக விதித்து அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்