போக்குவரத்து விதியை மீறிய வாகனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
போக்குவரத்து விதியை மீறிய வாகனங்ளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
போக்குவரத்து விதியை மீறிய வாகனங்ளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் சரக துணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் மேற்பார்வையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் கொணவட்டம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட 87 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், அதிகளவு பாரம் ஏற்றியது, கண்கூசும் வகையிலான எல்.இ.டி. முகப்பு விளக்கு பொருத்தியது, காரில் 'சீட்' பெல்ட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய 12 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், ரூ.32 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
மேலும் வரி செலுத்தாத லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது என்று போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.