மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த விவசாயி சாவு

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-30 19:12 GMT

 ஜெகதாபி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி ஜெகதாபி- காணியாளம்பட்டி சாலையில் மதுக்கரை நால்ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக பெருமாள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெருமாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்