வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த விவசாயி சாவு
வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முள்ளிப்பாடி தளிவாசல் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி என்கிற முத்துக்காளை (வயது 70). இவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தது. இதைக்கண்ட முத்துக்காளை அந்த நாயை துரத்தினார். அப்போது அந்த நாய் ராமசாமி என்கிற முத்துக்காளையை கடித்து குதறியது.இதனால் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி என்கிற முத்துக்காளை பரிதாபமாக இறந்தார்.