ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி

ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியானார்.;

Update:2023-07-30 14:12 IST

மோட்டார் சைக்கிள் மோதியது

அரியலூர் மாவட்டம் சில்லாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 34). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் சாலையில் மாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நின்று கொண்டிருந்த லாரியில் மோதியது.

சாவு

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தர்மராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் தர்மராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்