குடிகாரர்களின் கூடாரமான பயணிகள் நிழற்குடை
குடிகாரர்களின் கூடாரமான பயணிகள் நிழற்குடையை சுத்தமாக வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தலங்கை ரெயில் நிலையம் அருகே பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் டைல்ஸ் கற்கள் பதித்து நன்றாக உள்ளது. ஆனால், பயணிகள் அந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரவில் குடிமகன்கள் அங்கு மதுபானத்தைக் குடித்து விட்டு காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைகின்றனர். மழைக்கு ஒதுங்க முடியவில்லை. பீங்கான் கால்களில் குத்தி விடும் அச்சம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடையை சுத்தமாக வைத்து, பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.