போதை மாத்திரை விற்ற கும்பல் சிக்கியது

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2500 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-20 18:45 GMT

ேபாத்தனூர்

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2500 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

போதை மாத்திரை

கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையான வாலிபர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் அதை விற்றும் வருகின்றனர். அந்த மாத்திரை களை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக் காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, செட்டிபாளையம் ரோடு மேம்பாலத்தின் கீழே 3 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

3 பேர் கைது

இதில் அவர்கள், போதை மாத்திரை மற்றும் கஞ்சா பழக்கம் உடையவர்கள் என்பதும், அவற்றை விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில், அவர்கள் போத்தனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முகமத் யூசுப் (வயது 24), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் (20), போத்தனூர் மைல்கல்லை சேர்ந்த செய்யத் அபுதாஹீர் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2,500 போதை மாத்திரைகள், 1½ கிலோ கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள பறிமுதல் செய்யப்பட் டது.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்