மின்வாரிய ஊழியர்களுடன் கயிறு இழுத்து உதவிய நாய்

மின்கம்பம் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்களுடன் கயிறு இழுத்து நாய் உதவியது.

Update: 2023-09-19 18:48 GMT

கீரமங்கலத்தில் அறந்தாங்கி சாலையில் ஒரு மின்கம்பம் பழுதான நிலையில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆழமான குழி தோண்டி கம்பம் நட ஊழியர்கள் கயிற்றை இழுத்துக் கொண்டிருந்த போது கயிற்றை விடாமல் இழு இழு என்று சொல்லிக் கொண்டே மின்வாரிய ஊழியர்கள் கயிற்றை இழுத்தனர். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று மின்வாரிய ஊழியர்களுக்கு உதவுவது போன்று கயிற்றை பல்லால் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக கயிற்றை விடாமல் பிடிச்சுக்கோ என்று ஒரு ஊழியர் சொன்னதால் ஊழியர்கள் கயிற்றை விட்ட பிறகும் கடைசிவரை நாய் கயிற்றை விடாமல் கவ்விப் பிடித்திருந்தது மின்வாரிய ஊழியர்களை பிரமிக்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்